/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தேர்தல் பணியில் 432 'மைக்ரோ அப்சர்வர்கள்'
/
தேர்தல் பணியில் 432 'மைக்ரோ அப்சர்வர்கள்'
ADDED : ஏப் 05, 2024 05:50 AM
மதுரை : மதுரை மாவட்ட அளவில் 2727 ஓட்டுச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் உட்பட போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஓட்டுச் சாவடி பகுதிகளில் பணியாற்ற 432 மைக்ரோ அப்சர்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வங்கி ஊழியர்கள், மத்திய அரசு ஊழியர்களான இவர்கள் ஓட்டுப்பதிவின் போது ஓட்டுச் சாவடிகளை கண்காணித்து உடனுக்குடன் தேர்தல் பார்வையாளர்களுக்கு தகவல் அனுப்புவர். இதற்கென தனி வெப்சைட் உருவாக்கப்பட்டு அதில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
மாவட்ட அளவில் உள்ள 880 பதற்றமான ஓட்டுச்சாவடிகளை கண்காணிப்பதுடன் மற்ற ஓட்டுச்சாவடிகளிலும் பிரச்னைகளை தவிர்க்க துணை புரிவர்.
மேலும் 85 வயதை தாண்டிய முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே ஓட்டுச் சீட்டை கொண்டு போய் கொடுத்து ஓட்டுப்பதிவு செய்தற்வறை பெற்று வரும் குழுவோடு இணைந்து செயல்படுவர்.

