/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
யு.பி.எஸ்.சி., தேர்வு; 44 சதவீதம் 'ஆப்சென்ட்'
/
யு.பி.எஸ்.சி., தேர்வு; 44 சதவீதம் 'ஆப்சென்ட்'
ADDED : ஜூன் 17, 2024 12:54 AM
மதுரை: மதுரையில் நடந்த யு.பி.எஸ்.சி., தேர்வில் 44 சதவீதம் பேர் 'ஆப்சென்ட்' ஆகினர்.
மத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) சார்பில் முதன்மை தேர்வு நேற்று நடந்தது. மதுரையில் மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரி, மீனாட்சி அரசு பெண்கள் கல்லுாரி உட்பட 17 மையங்களில் இத்தேர்வு நடந்தது. மதுரையில் மொத்தம் 6265 பேர் இத்தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர். காலை அமர்வில் 3527 பேரும், மாலை அமர்வில் 3502 பேரும் பங்கேற்றனர். காலையில் 2738 பேர், மாலையில் 2763 பேர் என 44 சதவீதம் பேர் 'ஆப்சென்ட்' ஆகி இருந்தனர்.
மதுரை மாவட்டத்திற்கு பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள உழவர் நலத்துறை சிறப்பு செயலர் சங்கர் தேர்வு மையங்களை பார்வையிட்டார்.