ADDED : ஜூலை 11, 2026 05:00 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரையைச் சேர்ந்த சிலர் இன்ஸ்டாகிராமில் மக்களை அச்சுறுத்தும் வகையில் ஆயுதங்களுடன் வீடியோ எடுத்து ‘ரீல்ஸ்’ வெளியிட்டு வருகின்றனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கண்காணித்தில், மதுரை சேம், பயமறியார்கள் மதுரை சம், ஜாபர் பிரதர்ஸ், மதுரை எஸ்.எம்.கே., ஆகிய இன்ஸ்டா கணக்குகளில் அபாயகரமான ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்டது தெரிந்தது.
இதுதொடர்பாக கீரைத்துரையில் 2 வழக்குகள், தெற்குவாசல், சிந்தாமணி ஸ்டேஷனில் தலா ஒன்று, டூவீலரில் ‘வீலிங்’ செய்ததாக தல்லாகுளத்தில் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
