ADDED : ஜூலை 11, 2026 04:31 PM
அ நிறம் | அளவு
மேலுார்: கீழவளவு பஞ்சபாண்டவர் மலையில் அறிவு திருக்கோயில் அறக்கட்டளை, திருப்பத்துார் மனவள கலை சார்பில் மக்களுக்கு காயகல்ப பயிற்சி அளித்தனர்.
நிர்வாகி சுகுமார், பேராசிரியர்கள் சுப்பிரமணி ஜீவா, இளங்கோ உள்ளிட்டோர் உடல் நலம், மனநலம், ஆன்ம நலம் குறித்து பயிற்சி அளித்தனர். பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கீழவளவு சமூக ஆர்வலர் செந்தில்குமார், பாலன் பாலாஜி செய்திருந்தனர்.
