/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
டோல்கேட்டை அகற்ற 6 ஊராட்சிகள் தீர்மானம்
/
டோல்கேட்டை அகற்ற 6 ஊராட்சிகள் தீர்மானம்
ADDED : ஆக 16, 2024 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம் நகராட்சி எல்லையில் இருந்து 1.5 கி.மீ., தொலைவில் விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ள கப்பலுார் டோல்கேட்டை அகற்றக் கோரியும், அதுவரைஉள்ளூர் வாகனங்களுக்கு முழுமையான கட்டண விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கூறி 12 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்களை திருமங்கலம் பகுதி மக்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது.
இதில் கப்பலுார், மறவன் குளம், கரிசல்பட்டி, உச்சப்பட்டி, மேலக்கோட்டை, தோப்பூர் உள்ளிட்ட 6 ஊராட்சிகளில் கப்பலுார் டோல்கேட்டைஅகற்ற வேண்டும் எனக் கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.