/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சர்வீஸ் ரோடு வாக்குறுதியை நிறைவேற்றாத அதிகாரிகள்: 8 கி.மீ., சுற்றிச்செல்லும் விவசாயிகள்

UPDATED : ஆக 02, 2024 05:16 AM
ADDED : ஆக 02, 2024 04:59 AM

மேலுார்: மேலுார் பகுதி விளைபொருட்களை கொண்டு செல்ல சர்வீஸ் ரோடு அமைத்து தருவதாக கூறியபடி நடக்காததால் விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
மேலுார் - காரைக்குடி வரை நான்குவழிச்சாலை அமைக்கும் பணி நடக்கிறது. நான்கு வழிச்சாலையின் ஒரு பகுதியில் சருகுவலையபட்டி, வடக்கு வலையபட்டி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இக் கிராமங்களின் வாழ்வாதாரமே விவசாயம்தான். தனியாமங்கலத்தில் இருந்து 11வது பெரியாற்று கிளைக் கால்வாய் வழியாக வரும் தண்ணீரைக் கொண்டு கரும்பு, நெல், வாழை பயிரிட்டுள்ளனர். ஏற்கனவே விளைபொருட்களை குழிச்செவல்பட்டி வழியாக மேலுார், மதுரைக்கு கொண்டு சென்றனர்.
தற்போது நான்கு வழிச்சாலை குறுக்கே வருவதால் விளை பொருட்களை கொண்டு செல்ல சர்வீஸ் ரோடு அமைத்து தர வேண்டும் என 'நகாய்' அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
விவசாயி தவமணி கூறியதாவது: சர்வீஸ் ரோடு அமைக்கும்படி 3 ஆண்டுகளாக அதிகாரிகளை சந்திந்து மனு கொடுத்தோம்.
அதிகாரிகள் பார்வையிட்டு அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்தும் நிறைவேற்றவில்லை.
நகாய் நிர்வாகம் அமைத்த பாலத்தின் உயரம் குறைவாக இருப்பதால், அதன்கீழாக விளை பொருட்களை கொண்டு செல்ல முடியவில்லை.
சர்வீஸ் ரோடு இல்லாததால் 8 கி.மீ., சுற்றிச் செல்ல வேண்டி உள்ளது. அதனால் பணம், நேரம் விரயமாகிறது. கலெக்டர் நேரில் ஆய்வு செய்து சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும் என்றார்.