/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரயில்வே கேட்டில் பழுதாகி நின்ற டிராக்டர்
/
ரயில்வே கேட்டில் பழுதாகி நின்ற டிராக்டர்
ADDED : ஆக 14, 2024 01:01 AM

திருமங்கலம் : திருமங்கலம் விமான நிலைய ரோட்டில் ரயில்வே கேட் தண்டவாளத்தில் பழுதாகி நின்ற டிராக்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
திருமங்கலம் விமான நிலைய ரோட்டில் ரயில்வே ஸ்டேஷனுக்கு மிக அருகில் உள்ள ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதனால் ரோடுகள் குண்டும் குழியுமாக உள்ளன.
தண்ணீர் கொண்டு சென்ற டிராக்டர் நேற்று மாலை தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பழுதாகி நின்றது.
டிராக்டர் டேங்கரில் தண்ணீர் நிறைய இருந்ததால் நகர்த்தவும் முடியவில்லை.
ஈரோட்டில் இருந்து செங்கோட்டை செல்லும் ரயிலுக்காக கேட்டை அடைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த ஜே.சி.பி., இயந்திரத்தின் மூலம் டிராக்டரை தண்டவாளத்தை விட்டு நகர்த்தினர். இதன்பின் கேட் அடைக்கப்பட்டு 15 நிமிட தாமதத்துடன் ரயில் கடந்து சென்றது.