/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை அரசு மருத்துவமனையில் எலும்பு மஜ்ஜை சிகிச்சை துவக்க வழக்கு
/
மதுரை அரசு மருத்துவமனையில் எலும்பு மஜ்ஜை சிகிச்சை துவக்க வழக்கு
மதுரை அரசு மருத்துவமனையில் எலும்பு மஜ்ஜை சிகிச்சை துவக்க வழக்கு
மதுரை அரசு மருத்துவமனையில் எலும்பு மஜ்ஜை சிகிச்சை துவக்க வழக்கு
ADDED : ஆக 10, 2024 05:25 AM
மதுரை : மதுரை அரசு மருத்துவமனையில் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைச் சிகிச்சை பிரிவை துவக்க தாக்கலான வழக்கில் தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
மதுரை வெரோணிக்கா மேரி தாக்கல் செய்த பொதுநல மனு: எலும்பு மஜ்ஜை செயலிழப்பு நோயால் உடலில் ரத்த அணுக்கள் குறையும். அடிக்கடி ரத்தம் ஏற்ற வேண்டும். நோய்த் தொற்று, ரத்தக் கசிவு பாதிப்பு ஏற்படும். மீண்டும் எலும்பு மஜ்ஜை செயல்பட வேண்டுமெனில் மாற்று அறுவைச் சிகிச்சை தேவை. இது ரத்தப் புற்றுநோய் பாதிப்புள்ளவர்கள், மரபணு பிரச்னைகளால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு அவசியம்.
இதற்கான சிகிச்சைப் பிரிவு சென்னை அரசு ராஜிவ்காந்தி மருத்துவமனையில் 2018ல் துவக்கப்பட்டது. இதுவரை 101 பேர் பயனடைந்துள்ளனர். தென்மாவட்டங்களிலிருந்து நோயாளிகள் அங்கு சென்றுவருவதில் சிரமம் உள்ளது. பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.
மதுரை அரசு மருத்துவமனையில் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைச் சிகிச்சை பிரிவை துவக்கினால் தென்மாவட்ட நோயாளிகள் பயனடைவர் என சுகாதாரத்துறை செயலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு மருத்துவக் கல்வி இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பி செப்.,2 ல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.