/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தாளாளர், தலைமையாசிரியை மீது ஆசிரியைகள் புகாரில் வழக்கு
/
தாளாளர், தலைமையாசிரியை மீது ஆசிரியைகள் புகாரில் வழக்கு
தாளாளர், தலைமையாசிரியை மீது ஆசிரியைகள் புகாரில் வழக்கு
தாளாளர், தலைமையாசிரியை மீது ஆசிரியைகள் புகாரில் வழக்கு
ADDED : மே 29, 2024 04:26 AM
மதுரை, ; மதுரையில் நிர்வாக பிரச்னையில் ஆசிரியைகள் புகாரில் தாளாளர், தலைமையாசிரியை உட்பட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மதுரை நரிமேடு நேரு வித்யாசாலை ஆரம்பப்பள்ளி ஆசிரியை மெட்டில்டா ஜெபமணி. உபரி ஆசிரியர்கள் இருந்ததால் வண்டியூர் அரசு பள்ளியில் பணியாற்றிவிட்டு மீண்டும் நேரு பள்ளிக்கு திரும்பினார். அவரை பணி செய்யவிடாமல் தடுத்ததோடு, அலைபேசியில் இருந்த அவரது பதிவுகளை காண்பித்து அவமானப்படுத்தியதாக தாளாளர் சேத் டேனிராஜ் பேசிங்கர் உட்பட 7 பேர் மீது நீதிமன்றம் உத்தரவுபடி தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மற்றொரு ஆசிரியை ரோசி ஞானகுமாரி. உடல்நிலை காரணமாக ஈட்டிய விடுப்பில் இருந்தார். வருமான வரி சான்றில் கையெழுத்திட வேண்டும் என அவரை பள்ளிக்கு வரவழைத்து தலைமையாசிரியை ேஹமா அருளானந்தம் உட்பட 4 பேர், ரோசியின் அலைபேசியை வாங்கி அதில் உள்ள பதிவுகளை பொதுவெளியில் பகிர்ந்துவிடுவதாக மிரட்டியதாக நீதிமன்றம் உத்தரவுபடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.