நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : அரிட்டாபட்டியில் சூழலியல் செயல்பாட்டாளர் ரவிச்சந்திரனின் நினைவேந்தல் நிகழ்வு நடந்தது. அவரது படத்திற்கு அம்மா அழகம்மாள் உள்ளிட்டோர் மரியாதை செய்தனர்.
அவரது நினைவாக மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளையினர் அரிட்டாபட்டி பல்லுயிரிய மரபு தளம் என்ற நுாலை வெளியிட்டனர். மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. வழக்கறிஞர் வாஞ்சிநாதன், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், இயற்கை வேளாண் அறிஞர் பாமயன், சமூக ஆர்வலர்கள் கம்பூர் செல்வராஜ், கேசம்பட்டி ஜீவா, சின்னகற்பூரம்பட்டி தங்கம் அடைக்கண் உள்ளிட்டோர் பறவைகள் பல்லுயிர் தளமாக அறிவிப்பதற்கும், மலைகளை பாதுகாப்பதில் ரவிச்சந்திரனின் பங்களிப்பு குறித்தும் பேசினர்.