/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை அறநிலையத்துறை இணை கமிஷனர் மீது பெண் ஊழியர்கள் பெயரில் போலி புகார்
/
மதுரை அறநிலையத்துறை இணை கமிஷனர் மீது பெண் ஊழியர்கள் பெயரில் போலி புகார்
மதுரை அறநிலையத்துறை இணை கமிஷனர் மீது பெண் ஊழியர்கள் பெயரில் போலி புகார்
மதுரை அறநிலையத்துறை இணை கமிஷனர் மீது பெண் ஊழியர்கள் பெயரில் போலி புகார்
ADDED : ஆக 12, 2024 05:11 AM
மதுரை : மதுரை மண்டல ஹிந்து அறநிலையத்துறை இணை கமிஷனர் செல்லத்துரை மீது பெண் ஊழியர்கள் பெயரில் போலியாக புகார் அளித்தது தொடர்பாக 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட செயல் அலுவலர் (இ.ஓ.,) ஜவஹருக்கு தொடர்பா என போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
இணைகமிஷனர் செல்லத்துரை கட்டுப்பாட்டில் விருதுநகர் மாவட்ட கோயில்களும் உள்ளன. இணைகமிஷனர் இதே துறையில் பணிபுரியும் 21 பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக துறை அமைச்சர், கமிஷனர் மற்றும் விசாகா கமிட்டி தலைவர் ஆகியோருக்கு புகார் அளித்துள்ளதாகவும், இதனால் இணைகமிஷனர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் 2.8.2024 தேதியிட்ட கடிதம் ஒன்று வைரலானது.
இதன் பின்னணியில் இணைகமிஷனரால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட செயல் அலுவலர் ஜவஹர் இருந்தது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து இணை கமிஷனர் மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம் புகார் அளித்துள்ளார்.
இதன் விவரம்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்துார் அருகே மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில் இ.ஓ., ஜவஹர். அவர் மீது எழுந்த பல்வேறு புகார்கள் காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
ஒழுங்கு நடவடிக்கை காரணமாக அவரால் ஓய்வு பெறமுடியவில்லை. இந்நிலையில் என்னை அவமானப்படுத்த வேண்டும் என 21 பெண் ஊழியர்கள் பெயரில் என் மீது பாலியல் புகார் ஒன்றை தயாரித்து சமூக வலைத்தளங்களில் பரவச்செய்தார்.
சம்பந்தப்பட்ட அந்த 21 பெண்களும் அதுபோன்று புகார் ஏதும் அளிக்கவில்லை என தெரிய வந்தது.
புகாரில் அந்த பெண்களின் பெயரிலான கையெழுத்துக்களை ஒரே நபரால் எழுதியதும் தெரியவந்துள்ளது.
அந்த நபரின் கையெழுத்தும், ஜவஹரின் கையெழுத்தும் ஒன்றாக உள்ளதும் தெரிந்துள்ளது. இதுகுறித்து விசாரித்து ஜவஹர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளார். இப்புகார் மீது விரைவில் விசாரணை துவங்கும் என போலீசார் தெரிவித்தனர்.