/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வீடுகளில் மின்விபத்தை தவிர்க்கும் கருவி அவசியம்; மண்டல பொறியாளர் வலியுறுத்தல்

ADDED : ஜூன் 28, 2024 12:36 AM

மதுரை: வீடுகளில் மின்விபத்தை தவிர்க்க 'இ.எல்.சி.பி.,' சாதனத்தை பொருத்துவது அவசியம்' என மண்டல தலைமை பொறியாளர் ஜவஹர் பேசினார்.
மதுரை மின்பகிர்மான பெருநகர வட்டம் சார்பில் மின்வாரிய களப்பணியாளர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடந்தது. மேற்பார்வை பொறியாளர் சந்திரா முன்னிலை வகித்தார்.
தலைமை வகித்த தலைமைப் பொறியாளர் ஜவஹர் பேசுகையில், ''மின்திட்ட பொறியாளர்கள், பணியாளர்கள் மின்பாதுகாப்பு சம்பந்தமாக தினமும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். மின்பாதுகாப்பு சாதனங்களை முறையாக பயன்படுத்த வேண்டும். அதற்கான வழிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். மின்கசிவால் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு, அனைத்து வீடுகளிலும் 'எர்த் லீக்கேஜ் சர்க்யூட் பிரேக்கர்' (இ.எல்.சி.பி.,) சாதனத்தைப் பயன்படுத்த வலியுறுத்த வேண்டும்'' என்றார்.
செயற்பொறியாளர்கள் லதா, பாலபரமேஸ்வரி, உதவி செயற்பொறியாளர் சண்முகநாதபூபதி, உதவி மின்பொறியாளர் சவுந்தரபாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.