/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் தேவை
/
மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் தேவை
ADDED : ஏப் 01, 2024 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : தென்பழஞ்சி கால்நடை மருத்துவமனைக்கு தென்பழஞ்சி, சாக்கிலிப்பட்டி, வேடர் புளியங்குளம் பகுதி கிராமங்களைச் சேர்ந்தோர் கால்நடைகளை அழைத்து வருகின்றனர். அங்கு சுற்றுச்சுவர் இல்லாததால் இரவில் மருத்துவமனை வளாகத்தை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். மது குடிக்கும் இடமாகவும் உள்ளது. இதனால் கால்நடைகளை அழைத்து வரும் விவசாயிகளின் கால்களை உடைந்த பாட்டில் துண்டுகள் பதம் பார்க்கின்றன.
மருத்துவமனை வளாகத்தில் நடப்படும் மரக்கன்றுகளை சிலர் பிடுங்கி எறிந்துவிடுகின்றனர். இதை எல்லாம் தவிர்க்க சுற்றுச்சுவர் அவசியம்.

