ADDED : ஜூலை 15, 2024 05:46 AM
மேலுார் : எட்டிமங்கலம் கிராமத்தின் நுழை வாயிலில் ஊராட்சி, வி.ஏ.ஓ.,அலுவலகம் மற்றும் நுாலகம் செயல்படுகிறது. நுாலகத்தில் ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட நுாற்கள் உள்ளன. எட்டிமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் இந் நுாலகத்திற்கு வந்து செல்கின்றனர்.
இந்த நுாலகத்தின் முன் பகுதியில் தினமும் அமர்ந்து குடிமகன்கள் மது அருந்துகின்றனர். போதைத் தலைக்கேறிய நிலையில் மதுபாட்டில்களை உடைக்கின்றனர். பாலிதீன், சாப்பாட்டுக் கழிவுளை விட்டுச் செல்கின்றனர். அதனால் நுாலகம் மற்றும் அதனருகில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு வருவோர் முகம் சுளிக்கும் நிலை உள்ளது.
தினமும் நுாலகத்தின் முன்புறம் மதுபாட்டில்கள் மற்றும் கழிவுகளை அகற்றுவதே நுாலகரின் வேலையாகி விட்டது. அதனால் மேலவளவு போலீசார் அவ்வப்போது இப்பகுதிக்கும் வந்து, படிக்கும் இடத்தில் குடிமகன்களை குடிக்க விடாமல் செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

