
சேதமடைந்த சாக்கடை மூடி
வைகை வடகரை சீனிவாசப் பெருமாள் கோவில் அருகே பாதாள சாக்கடை மூடி உடைந்துள்ளதால் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. அதனை சரியாக மூட வழிவகை செய்ய வேண்டும்.
- மோகன், ஓபுளா படித்துறை
மதுரை ஸ்டேட் பேங்க் ஆபீஸர்ஸ் 2வது காலனி, பொற்குடம் மெயின் ரோட்டில் பாதாள சாக்கடை மூடி சரியாக அடைக்காமல் இருப்பதால், பலமாதங்களாக கழிவு நீர் ரோட்டில் செல்கிறது. துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்கள் அந்த ரோட்டில் செல்ல சிரமப்படுகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் விரைவில் இதை சரி செய்ய வேண்டும்.
- கிருஷ்ணா, சந்திரகாந்தி நகர்
பஸ்வசதி தேவை
மதுரை கோசாகுளம் பகுதிக்கு போதுமான அளவில் பஸ் வசதி இல்லாததால் பயணிகள் சிரமப்படுகின்றனர். போக்குவரத்து துறை அதிகாரிகள் கூடுதல் பஸ் வசதி ஏற்பாடு செய்து தரவேண்டும்.
- சுபாஷ் குமார், கோசாகுளம்
குப்பையால் அவதி
தாசில்தார் நகர் முகவை தெருவின் கிழக்கு பகுதியில் காலி பிளாட்டில் மாமிச கழிவு, குப்பைகளைக் கொட்டுவதால் எலி, நாய், பாம்புகளின் நடமாட்டம் உள்ளது. துாய்மை பணியாளர்கள் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- நாகசுப்பிரமணியன், தாசில்தார் நகர்
கட்டணமில்லா சீட்டு
மதுரை திருமங்கலம் பஸ் ஸ்டாண்ட் இரு சக்கர வாகனம் நிறுத்துமிடத்தில், சீட்டில் கட்டணம் குறிப்பிடாமல் பணம் வசூலிக்கின்றனர். அதிகாரிகள் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- முருகதாஸ், நாகமலைபுதுக்கோட்டை
வெளியேறும் சாக்கடை
திருவள்ளுவர் நகர் 1, 2வது தெருக்களில் பாதாள சாக்கடை கழிவுநீர் தெருவில் செல்வதால் சுகாதார கேடு விளைகிறது. விரைந்து இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராமு, பழங்காநத்தம்
மின் விளக்கு தேவை
மதுரை பசுமலை கே.ஆர்.பி., நகரில் பல ஆண்டுகளாக மின் விளக்கு பொருத்தப்படாததால் இரவு நேரங்களில் பொதுமக்கள் அவ்வழியே செல்ல முடியாமல் தவிக்கின்றனர். மின் விளக்கை பொருத்த மின்வாரியம் நடவடிக்கை அவசியம் தேவை.
- ரம்யா, பெரக்கா நகர்
தேங்கும் மழைநீர்
மதுரை ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் மழைநீர் தேங்கி நிற்பதால் பயணிகள் சிரமப்பட்டு பஸ் ஸ்டாண்டுக்குள் செல்கின்றனர். நீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- செந்தில், புதுார்.