sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஒரு போன் போதுமே...

/

ஒரு போன் போதுமே...

ஒரு போன் போதுமே...

ஒரு போன் போதுமே...


ADDED : ஏப் 03, 2024 05:32 AM

Google News

ADDED : ஏப் 03, 2024 05:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கழிவுநீர் தேக்கம்

மதுரை வடபழஞ்சி, செந்தாமரைக் கல்லுாரி அருகே அமைத்த கால்வாய் பல மாதங்களாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. சிலர் வீட்டருகே கால்வாயில் மண்ணை கொட்டுவதால் கழிவுநீர் தேங்கி நின்று தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. ஊராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராமசாமி, நாகமலை புதுார்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் மார்க்கெட் ரோட்டருகே கால்வாயில் புதர்மண்டிக் கிடப்பதால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- முனிராஜ், ஜெய்ஹிந்த் புரம்.

குண்டும் குழியுமான ரோடுகள்

மதுரை டி.வி.எஸ். நகர் சேசு மகால் ரோட்டில் குடிநீருக்காக தோண்டிய ரோடுகளை சரிவர மூடாததால் குண்டும் குழியுமாக உள்ளது. வாகனங்கள் செல்லும்போது புழுதி கிளம்புவதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். அதிகாரிகள் தரமான ரோடு அமைத்துத் தர வேண்டும்.

- சகாயம், டி.வி.எஸ். நகர்.

காலிமனையில் கழிவுநீர்

மதுரை கீழக்குயில்குடி அருகே நான்கு வழிச் சாலையில் இருந்து அண்ணா பல்கலை செல்லும் வழியில் காலி மனையில் கழிவுநீர் வெகு நாட்களாக தேங்கி உள்ளது. இதில் கொசு உற்பத்தியாகி நோய் தொற்று ஏற்படுகிறது. ஊராட்சி அதிகாரிகள் கழிவுநீரை வெளியேற்ற வேண்டும்.

- சிவராமன், கீழக்குயில்குடி.

குப்பை தேக்கம்

மதுரை சிக்கந்தர் சாவடி வேளாண் உணவு வர்த்தக மையம் அருகே ரோட்டில் அதிகளவு குப்பை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. கொசு உற்பத்தியாகி நோய் தொற்று ஏற்படுகிறது. மாநகராட்சியில் புகார் அளித்தும் பலனில்லை. அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- மாணிக்கம், சிக்கந்தர் சாவடி.






      Dinamalar
      Follow us