
யார் பொறுப்பு
மதுரை கிழக்கு ஒன்றியம் புதுத்தாமரைப்பட்டி பொன்மணி நகரில், வீடுகளுக்கு பைப் மூலம் காஸ் கனெக் ஷன் கொடுப்பதற்காக நன்றாக இருந்த ரோட்டை இந்தியன் ஆயில் நிறுவனம் தோண்டினர். தற்போது சேறும் சகதியுமாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதை ஊராட்சி நிர்வாகம் சரிசெய்யுமா அல்லது இந்தியன் ஆயில் நிறுவனம் சரிசெய்யுமா.
- ஜெயசித்ரா, புதுத்தாமரைப்பட்டி.
குடிநீர் வருவதில்லை
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் தண்ணீர் முறையாக வருவதில்லை. மக்கள் கோடையில் தண்ணீரின்றி தவிக்கின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- விஜி ஸ்ரீநிவாஸ், ஜெய்ஹிந்த்புரம்.
கழிவுநீர் பெருக்கெடுப்பு
மதுரை மாட்டுத்தாவணி உயர்நீதிமன்ற குடியிருப்பு அருகே ரோட்டில் கழிவுநீர் நிரம்பி அருகிலுள்ள காலிமனையில் தேங்கி நிற்கிறது. நடந்து செல்லும் பொதுமக்கள் முகம் சுழிக்கும் வகையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. மாநகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஷிவ்ராஜ், மாட்டுத்தாவணி.
கொசு உற்பத்தி பெருகுது
மதுரை மாட்டுத்தாவணி 80 அடி ரோட்டில் காய்கறி மார்க்கெட் அருகில் மழைநீர் தேங்கி கொசு உற்பத்தி பெருகியுள்ளது. டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட நோய்கள் பரவாமல் தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சுதன், அண்ணாநகர்.
குண்டும் குழியுமான ரோடுகள்
திருப்பரங்குன்றம் முதல் திருநகர் வரையுள்ள மெயின் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. புழுதி கிளம்பி வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இரவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வரும் தேர்தலில் வெற்றி பெறுவோர் தயவுசெய்து மதுரையில் உள்ள ரோடுகளை சீரமைக்க வேண்டும்.
- அண்ணாதுரை, திருநகர்.

