
குப்பைத் தொட்டி வேண்டும்
நாகமலை புதுக்கோட்டை ஜெயராஜ் நாடார் பள்ளி அருகே குப்பைத் தொட்டி இல்லாததால் வாசலில் குப்பையை கொட்டுகின்றனர். பள்ளி செல்லும் குழந்தைகள், பெற்றோர் நோய் தொற்று அபாயத்திற்கு ஆளாகின்றனர். துாய்மைப் பணி அதிகாரிகள் குப்பைத் தொட்டி ஏற்பாடு செய்ய வேண்டும்.
- கதிரேசன் நாகமலை புதுக்கோட்டை
கழிவுநீர் தேக்கம்
மதுரை ஆத்திக்குளம் பழனிச்சாமி நகர் 6வது தெருவில் அடிக்கடி கழிவுநீர் வெளியேறுவதால் துர்நாற்றம் வீசுகிறது. நோய் தொற்று ஏற்பட காரணமாகிறது. மாநகராட்சி நிர்வாகம் விரைந்து இதனை சரி செய்ய வேண்டும்.
- முத்துப்பாண்டி, ரிசர்வ் லைன்
தேங்கும் தண்ணீர்
மதுரை பசும்பொன் நகர் காளியம்மன் கோவில் தெருவில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகனங்களில் மட்டுமின்றி நடந்து செல்லவும் மக்களுக்கு சிரமமாக உள்ளது. மழைநீர் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பவித்ரன், பசும்பொன் நகர்
குழாய் உடைந்துள்ளது
பைபாஸ் ரோடு எல்லீஸ் நகர் சிக்னல் எதிரே குழாய் உடைந்து சில நாட்களாக தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. அப்பகுதியில் பள்ளம் ஏற்பட்டு விபத்து ஏற்படுத்தும் இடமாக மாறியுள்ளது. உடனே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பத்பநாபன், துரைசாமி நகர்
நாய்களால் தொல்லை
கே.கே. நகர் எல்.ஐ.ஜி., காலனியில் தெரு நாய்கள் அதிகம் திரிவதால் பொதுமக்கள் அச்சமுடன் நடமாடுகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் இதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும்.
- பாலசுப்பிரமணியன், கே.கே.நகர்
நடைபாதை ஆக்கிரமிப்பு
தெற்கு வாசல் பகுதியில் ரோட்டின் இருபுற நடை பாதைகளை கடைகளும், இரு சக்கர வாகனங்களும் ஆக்கிரமிப்பதால் நெரிசல் உண்டாகிறது. மக்கள் ரோடுகளில் நடந்து செல்வதால் விபத்துக்கு தள்ளப்படும் சூழ்நிலை உருவாகிறது. உரிய நடவடிக்கை தேவை.
- அசோக், தெற்கு மாரட் வீதி.
பராமரிப்பில்லாத பாலம்
பழங்காநத்தம் டி.வி.எஸ்., நகர் பாலத்தின் கீழ்புறம் நடைபாதையை சரியாக பராமரிக்காததால் அசுத்தமாக உள்ளது. படிகள் உடைந்தும், கண்ணாடி பாட்டில்களும், குப்பையும் நிறைந்து இருப்பதால் பொதுமக்கள் பயன்படுத்த சிரமமாக உள்ளது. துப்புரவு பணியாளர்கள் இதனை சுத்தம் செய்ய வேண்டும்.
- பிரனேஷ், பழங்காநத்தம்.
மழைநீர் தேக்கம்
சர்வேயர் காலனி ஆவின் பால் பூத் அருகே மழைநீர் தேங்கி நிற்பதால் பால் வாங்க வரும் வாடிக்கையாளர்களும், பால் இறக்க வரும் உரிமையாளர்களும் அவதிக்குள்ளாகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராமநாதன், சர்வேயர் காலனி.
சாக்கடை வெளியேற்றம்
மதுரை பாஸ்டின் நகர் 4 வது தெரு பெத்தானியாபுரத்தில் பாதாள சாக்கடை வெளியேறி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் தொற்று அபாயம் ஏற்படுகிறது. துாய்மை பணியாளர்கள் விரைவில் சுத்தம் செய்ய வேண்டும்.
- சக்திவேல், பாஸ்டின் நகர்.