
போலீஸ் பூத்தால் இடையூறு
மதுரை முடக்குச்சாலை பென்னர் சந்திப்பில் புதிய பாலத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் போலீஸ் பூத், நாகமலையில் இருந்து வரும் வாகனங்களுக்கு கோச்சடை செல்லும் வாகனங்களை மறைக்கும் வகையில் உள்ளது. போக்குவரத்து போலீசார் பூத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.
- மனோகரன், கோச்சடை
கழிவுநீர் தேக்கம்
மதுரை ராஜாமில் ரோடு பகுதியில் கழிவுநீர் பெருக்கெடுத்து ரோடுகளில் குளம் போல் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீர் லாரிகள் மூலம் உடனே சுத்தப்படுத்த வேண்டும்.
- மணி, பொன்னகரம்
நிரம்பி வழியும் சாக்கடை
ஹார்விபட்டி முதல் தெருவில் பாதாள சாக்கடை நிரம்பி ரோட்டில் ஓடுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- விமல், ஹார்விப்பட்டி
குடிநீர் குழாய் உடைப்பு
மதுரை வில்லாபுரம் வள்ளலார் தெருவில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. அதிகாரிகள் டெண்டர் கொடுக்கவில்லை, சரிசெய்ய ஆட்கள் இல்லை என ஏதேதோ காரணம் சொல்லி தட்டிக்கழிக்கின்றனர். மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பாண்டியராஜன், வில்லாபுரம்
இருளில் சரவணப் பொய்கை
திருப்பரங்குன்றம் சரவணபொய்கையில் இரவு நேரம் மின் விளக்குகள் எரிவதில்லை. அதனை பயன்படுத்தி பொய்கையில் மீன்களை திருடிச்செல்கின்றனர். அறநிலையத்துறை அதிகாரிகள் சரவணப் பொய்கை மின்னொளியில் ஜொலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சதீஷ் குமார் திருப்பரங்குன்றம்