ADDED : ஆக 10, 2024 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : உத்தப்பநாயக்கனுார் தனியார் பள்ளி வேன் நேற்று மாலை பள்ளி மாணவ மாணவிகளை இறக்கிவிட கே.பெருமாள்பட்டிக்கு சென்றது. குறுகலான கல்லுாத்து -கே.பெருமாள்பட்டி ரோட்டில் குடிநீர் குழாய் பதிக்க ரோட்டோரம் பள்ளம் தோண்டி மூடியுள்ளனர்.
எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட ஓரம் கட்டியபோது பள்ளத்தில் வேன் சாய்ந்தது.
டிரைவர் சாமர்த்தியமாக மேலும் சாய விடாமல் வேனை நிறுத்தியதால் மாணவர்கள் காயமின்றி தப்பினர்.

