நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் கண்வங்கி சார்பில் தேசிய கண்தான இருவார விழா நேற்று துவங்கியது. இதையொட்டி முதல்நாளான நேற்று விழிப்புணர்வு மாரத்தான் நடந்தது. விரகனுார் ரிங்ரோடு முதல் அரவிந்த் மருத்துவமனை வரை 5 கி.மீ., நடந்த மாரத்தானை போலீஸ் துணை கமிஷனர் கேரன்காரத் துவக்கி வைத்தார்.
முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் கிம், கார்னியா சேவை பிரிவு தலைவர் டாக்டர் பிரஜ்னா, கண்வங்கி மேலாளர் சரவணன், மக்கள் தொடர்பு அலுவலர் ராமநாதன் உட்பட மருத்துவமனை பணியாளர்கள் பங்கேற்றனர்.

