/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாற்றுத்திறனாளிகள் திடீர் சாலை மறியல்
/
மாற்றுத்திறனாளிகள் திடீர் சாலை மறியல்
ADDED : ஆக 03, 2024 06:24 AM

உசிலம்பட்டி : மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டடத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கும் பணிகள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அனைத்து வகை
மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தினர் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.உசிலம்பட்டி ஒன்றிய அலுவலகம் முன்பு காலை 11:00 மணிக்கு மறியல் செய்தனர். மாவட்டச்செயலாளர் முருகன், ஒன்றிய நிர்வாகிகள் சின்னச்சாமி, நாகராஜ், வீரய்யா உட்பட பலர் பங்கேற்றனர்.உசிலம்பட்டி போலீசார் மற்றும் ஒன்றிய கமிஷனர் அன்பரசன், 'அடுத்த வாரம் வியாழக்கிழமை முதல் பணிகள் வழங்கப்படும்' என சமரசம் செய்தனர்.மறியல் காரணமாக உசிலம்பட்டி - பேரையூர் ரோட்டில் 15 நிமிடங்கள் போக்குவரத்துபாதித்தது.