/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நவீன தொழில்நுட்பங்களில் முழுமையான புரிதல் அவசியம்: இணை இயக்குநர் வலியுறுத்தல்
/
நவீன தொழில்நுட்பங்களில் முழுமையான புரிதல் அவசியம்: இணை இயக்குநர் வலியுறுத்தல்
நவீன தொழில்நுட்பங்களில் முழுமையான புரிதல் அவசியம்: இணை இயக்குநர் வலியுறுத்தல்
நவீன தொழில்நுட்பங்களில் முழுமையான புரிதல் அவசியம்: இணை இயக்குநர் வலியுறுத்தல்
ADDED : செப் 02, 2024 01:24 AM

மதுரை : கல்வித்துறையில் காலத்திற்கு ஏற்ற நவீன தொழில்நுட்பங்களை தலைமையாசிரியர்கள் முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும் என இணை இயக்குநர் சுவாமிநாதன் வலியுறுத்தினார்.
மதுரையில் தமிழ்நாடு அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் சார்பில் மாநில அளவில் 13 பணி நிறைவு பெற்ற, 6 பதவி உயர்வு பெற்ற, 54 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்ற தலைமையாசிரியர்களுக்கான பாராட்டு விழா மாவட்ட தலைவர் தென்கரை முத்துப்பிள்ளை தலைமையில் நடந்தது.
மாநில தலைவர் அன்பரசன் தலைமையாசிரியர்களுக்கு பரிசு வழங்கினார்.
இணை இயக்குநர் சுவாமிநாதன் பேசியதாவது: தலைமையாசிரியர் பணி சவாலான ஒன்று.
இவற்றில் நிறைகளை மட்டும் எடுத்துக்கொண்டு பள்ளி வளர்ச்சிக்கு பணியாற்றும் கடமை ஒவ்வொருவருக்கும் உண்டு. அரசு வழங்கும் நலத்திட்டங்களை முழுமையாக மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பும் உள்ளது. 100 சதவீதம் கற்பித்தலை உறுதி செய்ய வேண்டும். தலைமை ஆசிரியர்கள் நவீன தொழில் நுட்பங்களுக்கு ஏற்ப தங்களை மேம்படுத்தி கல்வித்துறையில் முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும் என்றார்.
முன்னாள் மாநில தலைவர்கள் சாமி சத்தியமூர்த்தி, பீட்டர் ராஜா, மாநில செயலாளர் மாரிமுத்து, துணை தலைவர் முனியாண்டி, மாவட்ட அமைப்பு செயலாளர்கள் நவநீதகிருஷ்ணன், ரகுபதி, டி.இ.ஓ.,க்கள் இந்திரா, பாஸ்கரன் பங்கேற்றனர். மாவட்ட செயலாளர் திவ்யநாதன் நன்றி கூறினார்.