ADDED : ஜூலை 21, 2024 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: இடையபட்டி இந்திய திபெத் எல்லை காவல் படையினர் 2021 ஜூலை 20 சத்தீஸ்கர் மாநிலத்தில் நாரயன்பூர் மாவட்டம் சோட்டா டொங்கரில் நக்சல் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது நக்சல்களுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் காவல்படைவீரர் சிவ் நாராயணன் மீனா வீரமரணம் அடைந்தார். நேற்று அவரது நினைவு தினத்தை முன்னிட்டு இடையபட்டி படையணி முகாமில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
துணை கமாண்டன்ட் சுமித் குசேன் தலைமையில் படைவீரர்கள் மற்றும் பேங்க் ஆப் பரோடா மண்டல மேலாளர் ஜெய் கிருஷ்ணன் அஞ்சலி செலுத்தினர். 50 மரக்கன்றுகளை நட்டனர்.