ADDED : ஏப் 03, 2024 05:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார் : மதுரை மேற்கு ஒன்றியம்பொதும்பு ஊராட்சி ரங்கராஜபுரத்தில் பழுதடைந்துஉள்ள பஸ் ஸ்டாப்பை பயணிகள் பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர்.
அலங்காநல்லுார்- மதுரை மெயின் ரோட்டில் உள்ள இந்த பஸ் ஸ்டாப் 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. பராமரிப்பின்றி பஸ் ஸ்டாப்பின் அஸ்திவாரம் உட்பகுதி வலுவிழந்து உள்ளன.
காத்திருக்கும் சில முதியவர்கள் பஸ் ஸ்டாப் முன்பகுதியில் அமருகின்றனர். இங்குள்ள திறந்தவெளி கழிவுநீர் கால்வாயால் தடுமாறும் நிலை உள்ளது.
மெயின் ரோட்டில் வேகத்தடை அருகே நின்று பஸ்கள் பயணிகளை ஏற்றிசெல்கின்றன. இதனால் வெயிலில் ரோட்டில் பயணிகள் காத்திருந்து செல்லும் நிலை உள்ளது. பழுதடைந்த பஸ் ஸ்டாப்பை அகற்றி, புதிதாக கட்ட வேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர்.

