நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கள்ளிக்குடி வட்டார கிளை சார்பில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா தலைவர் பாண்டியன் தலைமையில் நடந்தது.
மாவட்ட துணைச் செயலாளர் வாசுதேவன், வட்டார பொருளாளர் முருகேஸ்வரி முன்னிலை வகித்தனர். செயலாளர் சுதந்திர பாண்டியன் வரவேற்றார்.
மாநில, மாவட்ட நிர்வாகிகள் மயில், முருகன், சீனிவாசன், எமிமாள் ஞானச் செல்வி, செயற்குழு உறுப்பினர் முருகேசன், கல்வி மாவட்ட நிர்வாகிகள் ஞானசேகரன், தனபாக்கியம் உள்ளிட்டோர் பணி நிறைவு பெற்ற கனகராஜ், லீலா ஆகியோரை வாழ்த்தி பேசினார். பொதுக்குழு உறுப்பினர் வைரபாண்டி நன்றி கூறினார்.

