/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வாகைக்குளத்தை தவிர்க்கும் பஸ் மீது நடவடிக்கை தேவை
/
வாகைக்குளத்தை தவிர்க்கும் பஸ் மீது நடவடிக்கை தேவை
ADDED : ஏப் 16, 2024 04:31 AM
மதுரை: 'திருமங்கலம் சி.வாகைக்குளம் கிராமத்திற்குள் வராமல் தவிர்க்கும் அரசு டவுன்பஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கலெக்டர் சங்கீதாவிடம் அக்கிராமத்தினர் மனு அளித்தனர்.
அதில் தெரிவித்துள்ளதாவது: பெரியார் பஸ்ஸ்டாண்ட் முதல் வாகைக்குளம் வரை இயக்கப்படும் 55 இ என்ற டவுன்பஸ் காலை, மாலை 3 'டிரிப்'கள் இயக்க அனுமதித்துள்ளனர். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் பஸ்சை இயக்குவதில்லை. கடைசி டிரிப் இரவு 8:25 மணிக்கு இயக்க வேண்டும். ஆனால் அடிக்கடி 'கட்' செய்து விடுகின்றனர்.
ஒருவேளை இயக்கினாலும் ஊருக்குள் வராமல் பயணிகளை இறக்கிவிட்டு இரவில் தவிக்க விடுகின்றனர். போக்குவரத்து அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.மக்கள் பயன்பெறும் வகையில் இரவு 'டிரிப்'பை தவிர்க்காமல் இயக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

