/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பிரசாரத்திற்கு உதயநிதி அழைக்கவில்லை சொல்கிறார் நடிகர் சூரி
/
பிரசாரத்திற்கு உதயநிதி அழைக்கவில்லை சொல்கிறார் நடிகர் சூரி
பிரசாரத்திற்கு உதயநிதி அழைக்கவில்லை சொல்கிறார் நடிகர் சூரி
பிரசாரத்திற்கு உதயநிதி அழைக்கவில்லை சொல்கிறார் நடிகர் சூரி
ADDED : மார் 25, 2024 06:47 AM
மதுரை, : ''என்னை பிரசாரத்துக்கு அமைச்சர் உதயநிதி அழைக்கவில்லை. நான் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளேன் என்பது அவருக்கு தெரியும்'' என நடிகர் சூரி கூறினார்.
மதுரையில் நேற்று அவர் கூறியதாவது:
முதல்முறை வாக்காளர்கள் கன்னிச்சாமி போல. முதல் ஓட்டை செலுத்த தயாராக உள்ளனர். கண்டிப்பாக அனைவரும் தேர்தலில் ஓட்டளிக்க வேண்டும். நமது ஓட்டு சாதாரணமானது அல்ல. ஒவ்வொருவரும் செலுத்தும் ஓட்டு நாட்டின் வளர்ச்சிக்கான ஓட்டாக இருக்க வேண்டும்.
தென்மாவட்டங்களில் பிரசாரத்தை தொடங்கி உள்ள அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்துகளை தெரிவித்து உள்ளேன். அவர் என்னை பிரசாரத்துக்கு அழைக்கவில்லை. நான் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளேன் என்பது அவருக்கு தெரியும். இது நல்ல தேர்தலாக இருக்கும் என நினைக்கிறேன். நல்லதாகவே நடக்கும். மக்களுக்கும் நல்லது நடந்தால் மகிழ்ச்சி என்றார்.