/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அடிப்படை வசதியில்லா ஆதிதிராவிடர் மயானம்
/
அடிப்படை வசதியில்லா ஆதிதிராவிடர் மயானம்
ADDED : ஆக 09, 2024 01:16 AM

விக்கிரமங்கலம்: கல்புளிச்சான்பட்டியில் ஆதிதிராவிடர் சமுதாய பயன்பாட்டில் உள்ள மயானத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இறந்தோர் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்ய எவ்வித வசதியும் இல்லை.
செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் ஊராட்சி கல்புளிச்சான்பட்டி நடுவூரில் 50க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசிக்கின்றன. கல்புளிச்சான்பட்டியில் உள்ள பிற சமுதாயத்திற்கான மயானத்தில் இறந்தோர் உடலை எரிக்க தகரம் மற்றும் சிமென்ட் கொட்டகை உள்ளது. இதனருகே உள்ள ஆதிதிராவிட சமுதாய மக்களுக்கு இடம் மட்டுமே உள்ளது. இறந்தோர் உடலை எரிக்கவும், சடங்குகளை செய்வதற்கும் தண்ணீர், மின்விளக்கு என எந்த அடிப்படை வசதியும் இல்லை. இதனால் ஈமச்சடங்கு நேரத்தில் மழை பெய்தால் சிரமப்படுகின்றனர்.
பால்பாண்டி கூறுகையில், ''எங்கள் கிராம மயானத்தில் எந்த வசதியும் இல்லை. ஆதிதிராவிடர் மயானம் புதர்மண்டி கிடக்கிறது. 30 சென்டுக்கு மேல் இடம் உள்ளது. ஒன்றிய நிர்வாகம் சுற்றுச்சுவர், உள்பட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்றார்.