/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரசு பாலிடெக்னிக்கில் மாணவர் சேர்க்கை
/
அரசு பாலிடெக்னிக்கில் மாணவர் சேர்க்கை
ADDED : ஜூன் 20, 2024 04:55 AM
செக்கானுாரணி: செக்கானுாரணி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டுக்கு சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் பாட பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் சேரலாம். பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நேரடியாக இரண்டாம் ஆண்டிலும், பிளஸ் 1, பிளஸ் 2 தவறிய மாணவர்கள் முதலாம் ஆண்டிலும் சேரலாம். கல்விக்கட்டணம் ஆண்டுக்கு ரூ.2147. அரசு ஆண்டுக்கு ரூ.2,200 கல்வி உதவித்தொகை வழங்குகிறது.
விடுதி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6,200 கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. மாணவியர்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000, மாணவர்களுக்கு தமிழ்புதல்வன் திட்டம் மூலம் மாதம் ரூ.1,000 தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது.
அனைத்து செயல்பாடுகளையும் www.gptccheckanurani.com இணையதளம் மூலம் அறியலாம். மேலும் விபரங்களுக்கு 89258 36243ல் தொடர்பு கொள்ளலாம் என முதல்வர் விஜயகுமாரி தெரிவித்துள்ளார்.