/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அ.தி.மு.க., - பா.ஜ., கள்ள உறவா? ஆதாரம் இருக்கா என கேட்கிறார் எம்.எல்.ஏ.,
/
அ.தி.மு.க., - பா.ஜ., கள்ள உறவா? ஆதாரம் இருக்கா என கேட்கிறார் எம்.எல்.ஏ.,
அ.தி.மு.க., - பா.ஜ., கள்ள உறவா? ஆதாரம் இருக்கா என கேட்கிறார் எம்.எல்.ஏ.,
அ.தி.மு.க., - பா.ஜ., கள்ள உறவா? ஆதாரம் இருக்கா என கேட்கிறார் எம்.எல்.ஏ.,
ADDED : மார் 24, 2024 06:06 AM
திருப்பரங்குன்றம் : ''பா.ஜ., விற்கும் அ.தி.மு.க., விற்கும் கள்ள உறவு உள்ளது என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். என்ன ஆதாரம் வைத்துள்ளார்'' என திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ., ராஜன்செல்லப்பா கேள்வி எழுப்பினார்.
மதுரை அ.தி.மு.க., வேட்பாளர் டாக்டர் சரவணன் அறிமுக கூட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., கூறியதாவது: தி.மு.க., ஆட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். போதை வஸ்துகள் எங்கு பார்த்தாலும் பரவி உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒற்றை செங்கலை காட்டியவர் எதை சாதித்தார். மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தாரா. அல்லது கடன் தரும் நிறுவனத்திடம் பேசினார்களா. ஆனால் நான் பலமுறை மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதினேன்.
ஆனால் எதையும் செய்யாமல் ஊடகச் செய்தியில் மட்டும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பாடுபட்டேன் என்று எம்.பி, வெங்கடேசன் கூறியுள்ளார். பா.ஜ., நோட்டாவிற்கு பின்னுக்குகூட வரலாம். சிலர் தொகுதியில் நிலைமை அப்படி உள்ளது. பன்னீர்செல்வம் நிலைக்கு அவரே தான் காரணம். அ.தி.மு.க., விற்கு மக்களிடம் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. இதைக் கண்டு பொறாமை அடைந்த முதல்வர் ஸ்டாலின், பா.ஜ., விற்கும் அ.தி.மு.க., விற்கும் கள்ள உறவு உள்ளது என்கிறார். என்ன ஆதாரம் வைத்துள்ளார். இந்த தேர்தலில் அவரது பொய் பிரசாரம் எடுபடாது என்றார்.
எம்.எல்.ஏ., பெரிய புள்ளான், கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் முருகன் கலந்து கொண்டனர்.

