/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மக்களைத் தேடி மருத்துவ திட்டம் தி.மு.க., மீது அ.தி.மு.க., குற்றச்சாட்டு
/
மக்களைத் தேடி மருத்துவ திட்டம் தி.மு.க., மீது அ.தி.மு.க., குற்றச்சாட்டு
மக்களைத் தேடி மருத்துவ திட்டம் தி.மு.க., மீது அ.தி.மு.க., குற்றச்சாட்டு
மக்களைத் தேடி மருத்துவ திட்டம் தி.மு.க., மீது அ.தி.மு.க., குற்றச்சாட்டு
ADDED : ஆக 11, 2024 04:41 AM
மதுரை ; ''மூன்று ஆண்டுகளில் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தில் 5.93 கோடி பேர் பயன்பெற்றதாக தி.மு.க., அரசின் திட்ட அறிக்கை முழு பூசணிக்காய் சோற்றில் மறைப்பது போல் உள்ளது'' என அ.தி.மு.க., குற்றம்சாட்டியுள்ளது.
கட்சியின் மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் மேலும் கூறியதாவது: இத்திட்டத்தில் மாவட்ட வாரியாக எத்தனை பேர் பயன் பெற்றனர் என்பதை வெள்ளை அறிக்கையாக அரசு வெளியிட வேண்டும். குறிப்பாக கிராமப்புறங்களில் இத்திட்டம் தோல்வியடைந்துள்ளது. பணியாளர்கள் பற்றாக்குறையும் உள்ளது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
அ.தி.மு.க., ஆட்சியில் பழனிசாமி கொண்டு வந்த அம்மா மினி கிளினிக்கை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மூடிவிட்டு தி.மு.க., கொண்டு வந்த இத்திட்டம் தோல்வி அடைந்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், லேப் டெக்னீசியன் உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதேபோல் அரசு மருத்துவமனைகளில் சுகாதார குறைபாடு உள்ளது. போதுமான மருந்து மாத்திரைகள் இருப்பு இல்லை என மருத்துவ பணியாளர்களே கூறி வருவது அரசுக்கு தெரியுமா. அமைச்சர் சுப்பிரமணியன் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்ற போது அங்கு ஜெயலலிதா படத்துடன்கூடிய போஸ்டர் இருப்பதை பார்த்து சத்தம்போட்டு தலைமை மருத்துவரை இடமாற்றினார். ஜெயலலிதா படம் கண்ணுக்கு தெரிந்த அமைச்சருக்கு தேசிய அளவில் தமிழக சுகாதாரத்துறை 12வது இடத்திற்கு பின்னோக்கி சென்றது தெரியவில்லையா என்றார்.

