/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பிஷப்பிடம் அ.தி.மு.க., ஆதரவு கேட்பு
/
பிஷப்பிடம் அ.தி.மு.க., ஆதரவு கேட்பு
ADDED : ஏப் 04, 2024 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை பிஷப் அந்தோணி பாப்புசாமியை அ.தி.மு.க., நகர் செயலாளர் செல்லுார் ராஜூ தலைமையில் வேட்பாளர் டாக்டர் சரவணன் சந்தித்து ஆசி பெற்று ஆதரவு கேட்டார்.
அவர் கூறுகையில், ''மதுரையில் இருந்து வேளாங்கண்ணிக்கு செல்ல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பார்லிமென்ட்டில் பேசுவேன்'' என்றார்.
செல்லுார் ராஜூ கூறுகையில், ''கடந்த தேர்தலில் 1.75 லட்சம் ஓட்டுகளில் வெற்றி வாய்ப்பு பறிபோனது. அது எப்படி என எங்களுக்கு தெரியும். தேர்தல் எனும் திருமண விழாவிற்கு யார் வந்தாலும் மாப்பிள்ளையாக இருப்பது டாக்டர் சரவணன்தான். சட்டை யார் வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம். ஆனால் அந்த சட்டை சரவணனுடையது'' என்றார்.

