/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் சரவணன் ஓட்டு சேகரிப்பு
/
ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் சரவணன் ஓட்டு சேகரிப்பு
ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் சரவணன் ஓட்டு சேகரிப்பு
ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் சரவணன் ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 17, 2024 05:04 AM

மதுரை : மதுரை அ.தி.மு.க., வேட்பாளர் சரவணன், நகர்செயலாளர் செல்லுார் ராஜூ தலைமையில் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஓட்டு சேகரித்தார். இருவரும் இறகு பந்து, கூடைப்பந்து விளையாடி அசத்தினர்.
செல்லுார் ராஜூ கூறியதாவது: எதிரணி வேட்பாளர் வெங்கடேசன் நன்றாக கதை எழுதினார். இப்போது கதையில் சரக்கு இல்லை. சரக்கு முறுக்கா... செட்டியார் முறுக்கா... என்று பழமொழி உண்டு. தி.மு.க., கூட்டணியில் சரக்கும் இல்லை, செட்டியார் முறுக்கும் இல்லை. எங்கள் வேட்பாளர் சரவணன் நல்ல சரக்கு. பொதுச்செயலாளர் செட்டியார் முறுக்கு.
ஒரு பக்கம் சிங்கம், ஒரு பக்கம் சிறுத்தை என இரண்டுக்கும் நடுவில் மாட்டிக் கொண்ட ஆட்டுக்குட்டி போல் அண்ணாமலை இருக்கிறார். மதுரையில் 'நோட்டா'வை விட பா.ஜ., குறைந்த ஓட்டு வாங்க போகிறது. மதுரை ஆன்மிக பூமி என்று கூறி ஓட்டு வாங்கி விடலாம் என்று நினைக்கிறார்கள். அந்த கதை இங்கு செல்லாது.
எப்படி இருந்த மனிதன் இன்று பலாப்பழத்தை துாக்கிக்கொண்டு அவர் நிற்கும் காட்சியை பாருங்கள். பலாப்பழம் பழுக்காது. அழுகி போய்விடும். எம்.பி., பதவிக்காக மானம் ரோஷம் இழந்துவிட்டார் பன்னீர்செல்வம். இவ்வாறு கூறினார்.
இதற்கிடையே நேற்று மதியம் பிரசாரத்தின்போது அப்பகுதி சிறுமி திடீரென மயங்கினார். அவருக்கு டாக்டர் சரவணன் முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

