/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கடந்த முறை வென்ற ஒரே தொகுதி தேனியில் அ.தி.மு.க., டெபாசிட் இழப்பு
/
கடந்த முறை வென்ற ஒரே தொகுதி தேனியில் அ.தி.மு.க., டெபாசிட் இழப்பு
கடந்த முறை வென்ற ஒரே தொகுதி தேனியில் அ.தி.மு.க., டெபாசிட் இழப்பு
கடந்த முறை வென்ற ஒரே தொகுதி தேனியில் அ.தி.மு.க., டெபாசிட் இழப்பு
ADDED : ஜூன் 04, 2024 11:56 PM
தேனி : கடந்த முறை வென்ற ஒரே தொகுதியான தேனியை அ.தி.மு.க., இழந்தது. அக்கட்சி வேட்பாளர் நாராயணசாமி டெபாசிட் இழந்தார்.
தேனியில் தி.மு.க., சார்பில் தங்கதமிழ்செல்வன், பா.ஜ., கூட்டணியில் அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன், அ.தி.மு.க., சார்பில் நாராயணசாமி, நாம் தமிழர் கட்சியில் மதன் மற்றும் சுயேச்சைகள் உட்பட 25 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
தொகுதியில் 11,43,159 ஓட்டுகள் பதிவானது. தங்க தமிழ்செல்வன் 5,71,493 ஓட்டுக்கள் பெற்றார். தினகரன் 2,92,668 ஓட்டுக்கள் பெற்றார். தங்க தமிழ்செல்வன் 2,78,825 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அ.தி.மு.க., வேட்பாளர் 1,55,587 ஓட்டுகள், நா.த.க., வேட்பாளர் மதன் 77,834 ஓட்டுக்கள், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ஜீவா 2222 ஓட்டுக்கள் பெற்றனர்.
அ.தி.மு.க, வேட்பாளர் உள்பட 23 பேர் டெபாசிட் இழந்தனர். கடந்த தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளர் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். பா.ஜ., கூட்டணியில் அ.தி.மு.க., வென்ற ஒரே தொகுதி இது. இந்த முறை அங்கு டெபாசிட் இழந்துள்ளது.