ADDED : ஜூலை 20, 2024 02:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: கருமாத்துாரில் அ.தி.மு.க., சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் கள்ளச்சாராய விவகாரம்தொடர்பாக துண்டு பிரசுரங்களை வழங்கும்நிகழ்ச்சி முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் நடந்தது.
தமிழகத்தில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த தவறிய முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என துண்டு பிரசுரங்கள் வினியோகித்தனர்.
செல்லம்பட்டி ஒன்றியசெயலாளர் ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ., க்கள் மகேந்திரன், மாணிக்கம், தமிழரசன், தேனி வேட்பாளர் நாராயணசாமி, மாவட்ட கவுன்சிலர் சுதாகரன், ஜெ., பேரவை மாநில துணைச்செயலாளர்துரை தனராஜ், உசிலம்பட்டி நகர் செயலாளர் பூமாராஜா, மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் ரகுபண்பாளன், நிர்வாகிகள்பவுன்ராஜ், மகேந்திரபாண்டி பங்கேற்றனர்.