நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலத்தில் மருதங்குடி தலைமையிலான ராஜ குல அகமுடையார்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் அரசு அறிவித்துள்ள தேவர் அரசாணை அறிக்கை சம்பந்தமாக அனைத்து அகமுடையார் சமுதாய தலைவர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் சந்திரன் தலைமை வகித்தார். அகம்படியார் அறக்கட்டளை தலைவர் மகாலிங்கம் முன்னிலை வகித்தார். நிர்வாகி அழகர்சாமி வரவேற்றார். குருநாதன் நன்றி கூறினார்.
தமிழகத்தில் கள்ளர், மறவர், அகமுடையார், தேவர் இனம் என்ற அரசாணை அகமுடையார் சமுதாயத்திற்கு தற்காலிகமாக தேவையில்லை. தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அகமுடையார் சமுதாயத்திற்கு பிற்படுத்தப்பட்ட பட்டியலில் 10 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். கப்பலுார் டோல்கேட்டை மத்திய மாநில அரசுகள் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.