நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டி வி.பெருமாள்பட்டி அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளியில் பெற்றோர், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் ஆலோசனை கூட்டம் தலைமை ஆசிரியர் லதா தலைமையில் நடந்தது.
தலைவர் ரேவதி, ஆசிரியர் பிரதிநிதி ஜெயலிங்கம், சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர். உள்ளூர் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை, உடற்கல்வி ஆசிரியரை முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் ஊதியத்துடன் நியமிப்பது, புதிய ஆசிரியர்கள் நியமிக்க அரசிடம் கேட்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றினர்.