நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி : வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார விவசாயிகள் குழு ஆலோசனை கூட்டம் நடந்தது.
குழுத் தலைவர் பசும்பொன்மாறன் தலைமை வகித்தார். தொழில்நுட்ப மேலாளர் பிரியா வரவேற்றார். வேளாண் உதவி இயக்குநர் பாண்டி, தோட்டக்கலை உதவி இயக்குநர் தாமரைச்செல்வி, பொறியியல் துறை உதவி பொறியாளர் காசிநாதன், வேளாண் அலுவலர் சத்தியவாணி வேளாண் திட்டங்கள் குறித்து விளக்கினர். வட்டார விவசாயிகள், ஆலோசனை குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். உதவி தொழில்நுட்ப மேலாளர் பூமிநாதன் நன்றி கூறினார்.