/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வழக்கறிஞர்கள் சங்க நிறுவனர்கள் தின விழா
/
வழக்கறிஞர்கள் சங்க நிறுவனர்கள் தின விழா
ADDED : செப் 13, 2024 05:36 AM

மதுரை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எம்.எம்.பி.ஏ.,வழக்கறிஞர்கள் சங்க நிறுவனர்கள் தின விழா நடந்தது.
தலைவர் ஐசக் மோகன்லால் வரவேற்றார். உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ பேசியதாவது:
இங்குள்ள வழக்கறிஞர்கள் திறமையானவர்கள். சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கையை 75 லிருந்து 100 ஆக உயர்த்த வேண்டும். பெரிய தொகை தொடர்பான சிவில் வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மட்டுமே விசாரிக்கப்படுகிறது.
அதை இங்கும் விசாரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். சென்னையிலுள்ள அனைத்து தீர்ப்பாயங்களையும் மதுரையிலும் ஏற்படுத்த வேண்டும் என்றார்.
சங்க நிறுவன உறுப்பினர்களான ஐசக் மோகன்லால், பி.ஜோதிமணி (உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி), ராஜகோபால், ஜோசப் தங்கராஜ், ஆர்.எஸ்.ராமநாதன் (உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி), காட்வின், சிவாஜி, மீனாட்சி சுந்தரம், வெங்கடேசன், சுந்தரேசன், கடற்கரை, ஜி.ஆர்.சுவாமிநாதன் (உயர்நீதிமன்ற தற்போதைய நீதிபதி), அருணாச்சலம், கோவிந்தராஜன், சுதர்சன், ஆறுமுகம் கவுரவிக்கப்பட்டனர்.
உயர்நீதிமன்றக் கிளை நிர்வாக நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் உள்ளிட்ட நீதிபதிகள் பங்கேற்றனர். சங்க பொதுச் செயலாளர் சரவணகுமார் நன்றி கூறினார்.