/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அனைத்து உணவுப் பொருட்களுக்கும் முழு வரிவிலக்கு தேவை வேளாண் உணவுத்தொழில் வர்த்தக சங்கம் வலியுறுத்தல்

ADDED : ஆக 06, 2024 05:15 AM
மதுரை: 'அனைத்து உணவுப் பொருட்களுக்கும் முழு வரிவிலக்கு தேவை' என, மதுரை வேளாண் உணவுத்தொழில் வர்த்தக சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
சங்கத்தலைவர் ரத்தினவேலு கூறியதாவது: அரிசி, கோதுமை, பயறு, பருப்பு, மாவு, மைதா, ரவை ஆகியவற்றுக்கு ஜி.எஸ்.டி. சட்டத்தின் கீழ் வரிவிதிப்பதில் குழப்பம் நிலவுகிறது.
'வேளாண் பொருட்கள்' என்ற ஜி.எஸ்.டி., சட்ட அறிவிக்கை விளக்கத்தில் தானியங்கள், பயறு வகைகள் மட்டுமல்லாது அவற்றின் உபபொருட்களான அரிசி, பருப்பு, மாவு, மைதா, ரவையையும் சேர்க்கவேண்டும். தானியங்கள் மற்றும் பயறு வகைகளின் நுகர்வு இப்பொருட்கள் மூலம் தான் நடக்கிறது.
கோதுமையை வேளாண் பொருளாகவும், அரிசியை ஆலையில் தயாரிக்கும் பொருள் என்ற அடிப்படையிலும் வரி விதிப்பதை ஏற்க முடியாது.
வரியில் மேலும் குழப்பத்தை அதிகரிக்கும் வகையில் எந்த அளவு 'பேக்கிங்' செய்தாலும் லேபில் பயன்படுத்த வேண்டும் என்ற சட்டத் திருத்தத்தை விரைவில் செய்யப்போவதாக நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதனால் ஜி.எஸ்.டி., சட்டத்தில் எந்த மாறுதலும் செய்யாமலேயே அரிசி உட்பட அனைத்து உணவுப் பொருட்களுக்கும் 'பேக்கிங்' எந்த அளவில் இருந்தாலும் வரி உண்டு என்ற நிலை உருவாகும். இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான்.
பொருள் அடிப்படையில் வரி விதிக்காமல் வணிகப் பெயர், பேக்கிங் என பொருளுக்கு சம்பந்தமில்லாதவற்றின் அடிப்படையில் வரி விதிக்கப்படுகிறது. இதைத் தவிர்க்க அனைத்து உணவுப் பொருட்களுக்கும் முழு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்றார்.