/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அடையாள எண் பெறாதவர்களுக்கு பிரதமர் ஊக்கத் தொகை நிறுத்தம் விவசாயிகளுக்கு வேளாண்துறை கண்டிப்பு

ADDED : மார் 11, 2025 05:21 AM
மதுரை: 'தனி அடையாள எண் பெறாத விவசாயிகளுக்கு மத்திய அரசின் பி.எம். கிசான் ஊக்கத்தொகை நிறுத்தப்படும்' என வேளாண் துறை எச்சரித்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 37ஆயிரம் பேர் விவசாயிகள் உள்ளனர். இதில் 57 ஆயிரத்து 832 பேர் பி.எம். கிசான் ஊக்கத்தொகை பெறுகின்றனர். ஆனால் 20 ஆயிரத்து 625 பேர் மட்டுமே தனி அடையாள எண் பெறுவதற்காக பதிவு செய்துள்ளனர். அடையாள எண் பெற்ற விவசாயிகளுக்கு மட்டும் விவசாயம், தோட்டக்கலை, மீன், பட்டு, கூட்டுறவு, ஆவின், கால்நடை உட்பட 13 துறைகளின் கீழ் மானியம், ஊக்கத்தொகை வழங்கப்படும் என இணை இயக்குநர் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: மத்திய அரசு டிஜிட்டல் தளத்தில் விவசாயிகளின் நிலம், பயிர் பற்றிய தகவல்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. ஆதார் எண் போல தற்போது ஒவ்வொரு விவசாயிக்கும் தனிஅடையாள எண் வழங்கப்படுகிறது. வேளாண், தோட்டக்கலை, வேளாண் விற்பனை துறைகள், இ-சேவை மையங்கள் மூலம் மத்திய அரசின் 'அக்ரிஸ்டேக்' தளத்தில் விவசாயிகளின் தகவல்களை பதிவேற்றி தனி அடையாள எண் வழங்கப்படுகிறது.
இதுவரை நான்கு மாதங்களுக்கு ஒருமுறை என 19 தவணைகளாக பி.எம். கிசான் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இனிமேல் தனி அடையாள எண் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே 20 வது தவணை ஊக்கத்தொகை ஏப்ரலில் விடுவிக்கப்படும். எனவே விரைவாக அரசு துறைகள் மற்றும் இ-சேவை மையங்களை அணுகி தனி அடையாள எண் பெற வேண்டும். இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.