ADDED : ஜூலை 31, 2026 07:12 PM
அ நிறம் | அளவு
மதுரை: அனைத்து மாவட்டங்களிலும் இருந்து தேர்வு செய்யப்பட்ட அரசு பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கு, செயற்கை நுண்ணறிவு பயிற்சி கட்டகம் தயாரித்தல் பணிமனை சேலத்தில் நடந்தது.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் (எஸ்.சி.இ.ஆர்.டி.,) நடத்திய இந்த முகாமில், மதுரை தியாகராஜர் கல்வியியல் கல்லுாரி உதவி பேராசிரியர் தங்கவேல், செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகள், அவற்றை கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளுடன் ஒருங்கிணைக்கும் முறைகள் குறித்து விளக்கினார்.
எஸ்.சி.இ.ஆர்.டி., முதுநிலை விரிவுரையாளர் மிலட் சேவியர், சேலம் மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் மகாலட்சுமி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
