ADDED : ஜூலை 31, 2026 06:30 PM
பாலமேடு: டி.மேட்டுப்பட்டியில் டிரான்ஸ்பார்மர் பணி கிடப்பில் போடப்பட்டதால் பொது மக்கள், விவசாயிகள் சிரமங்களை சந்திக்கின்றனர்.
இங்கு மின்வினியோக பிரச்னையால் நொண்டிச் சாமி கோயில் ரோட்டில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க 7 மாதங்களுக்கு முன் கம்பம் நடப்பட்டது. அதன் பின் பணிகள் நடக்கவில்லை. டிரான்ஸ்பார்மர் அமைக்காததால் வீடுகளில் மின்சாதன பொருட்கள், விவசாய மின் மோட்டார்கள் அடிக்கடி பழுதாயின. மின்துறை அதிகாரிகள் கவனம் செலுத்தி புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அவ்வூர் திருவேங்கடம் கூறியதாவது: இப்பகுதியில் புதிதாக டிரான்ஸ்பார்மர் அமைக்க கோரினோம். மக்களிடம் ரூ.20 ஆயிரம் வசூலித்து டிரான்ஸ்பாரம் அமைக்க 7 மின் கம்பங்களை கொண்டு வந்து நட்டுள்ளோம். கடந்த 7 மாதங்களாக பணிகள் நடக்கவில்லை. குறைந்த மின் அழுத்ததால் அவதிப்படுகிறோம். மின்வாரியத்தினர் ஒயர் இல்லை எனக் காரணம் கூறி தாமதப்படுத்துகின்றனர் என்றார்.
