ADDED : ஜூலை 31, 2026 06:30 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை மத்திய சிறை பணியாளர்களுக்கான மன அழுத்த மேலாண்மை பயிற்சி நடந்தது.
டி.ஐ.ஜி., முருகேசன் முன்னிலை வகித்தார். கண்காணிப்பாளர் சதீஷ்குமார் வரவேற்றார். உளவியல் நிபுணர் சுபாஷ் சந்திரன் பேசுகையில், ‘‘எண்ணங்களே நம் வாழ்வை மேம்படுத்தும். நம் எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் போகும்போது மன அழுத்தம் ஏற்படுவது இயல்பு. தேவையற்ற எண்ணங்களை கைவிடுவதே ஞானம்’’ என்றார். மன அழுத்தத்தை போக்கும் எளிமையான பயிற்சிகளை அளித்தார். பெண்கள் சிறை கூடுதல் கண்காணிப்பாளர் நீலமணி, சமூகவியல் வல்லுநர் சரவணன், 250க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பங்கேற்றனர்.
