/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை 'டைடல் பார்க்' திட்டத்திற்கு கூடுதலாக 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு; 2 ஆண்டுகளில் முடிக்க இலக்கு
/
மதுரை 'டைடல் பார்க்' திட்டத்திற்கு கூடுதலாக 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு; 2 ஆண்டுகளில் முடிக்க இலக்கு
மதுரை 'டைடல் பார்க்' திட்டத்திற்கு கூடுதலாக 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு; 2 ஆண்டுகளில் முடிக்க இலக்கு
மதுரை 'டைடல் பார்க்' திட்டத்திற்கு கூடுதலாக 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு; 2 ஆண்டுகளில் முடிக்க இலக்கு
ADDED : ஜூலை 19, 2024 06:00 AM

மதுரை : மதுரை மாட்டுத்தாவணியில் அமையவுள்ள டைடல் பார்க் திட்டத்திற்கு கூடுதலாக 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படுகிறது. இதற்கான நிலம் அளந்து ஒப்படைக்கும் பணியை மாநகராட்சி துவங்கியுள்ளது.
தமிழகத்தில் சென்னையை அடுத்து இரண்டாவது பெரிய நகரங்களில் சாப்ட்வேர் நிறுவனங்கள் முதலீடு செய்யவும், அங்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவும் அரசு திட்டமிட்டு மதுரை, திருச்சியில் டைடல் பார்க் அமைக்கும் திட்டங்களை அறிவித்தது.
மதுரை மாட்டுத்தாவணியில் ரூ.600 கோடியில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்காக 5.6 ஏக்கர் நிலத்தை மாநகராட்சி வழங்கியது. இத்திட்டம் துவங்குவதற்கான டெண்டர் விடுக்கப்பட்டது.
ஆனால் 'நிர்வாக காரணங்களுக்காக' நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இத்திட்டத்திற்கு கூடுதலாக 5 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாக மாநகராட்சியிடம் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கூடுதல் நிலம் ஒதுக்கீடு செய்யும் பணிகளை மாநகராட்சி தொடங்கியுள்ளது. இதன் மூலம் 10 ஏக்கர் பரப்பில் மதுரை டைடல் பார்க் பிரமாண்டமாக அமையவுள்ளது.
10 ஆயிரம் வேலைவாய்ப்புகள்
இத்திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது: மதுரையில் 5.6 ஏக்கரில் முதலில் அமைக்க திட்டமிடப்பட்டது. 12 மாடிகள் கொண்டதாக அமையவுள்ள பிரமாண்ட கட்டடத்திற்கு போதிய பார்க்கிங் வசதி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. உள்ளூர் திட்டக்குழுமம் விதிப்படி இதுபோன்ற திட்டங்களுக்கு ஒரு காரை பார்க்கிங் செய்ய தலா 50 சதுர அடி இடவசதி வேண்டும்.
இதற்காக கூடுதலாக 5 ஏக்கர் நிலம் ஒதுக்கித்தர மாநகராட்சியிடம் கேட்கப்பட்டது. இத்திட்டம் மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். சாப்ட்வேர் துறையில் மதுரையின் அடையாளம் மாறும். இத்திட்டத்தை 2026க்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.