நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் அருகே அ.கோவில்பட்டி கிராம பள்ளி, கல்லுாரி மாணவர்கள் சார்பில் 14வது ஆண்டு அன்னதானம் வழங்கப்பட்டது. உலக நன்மை வேண்டியும், மானாவாரி பகுதிவிவசாயம் செழிக்கவும், பொது தேர்வில் தேர்ச்சி பெறவும் மாணவர்கள் வழிபாடு, அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்தி வருகின்றனர்.
நேற்று முத்தாலம்மன் மற்றும் 9 கிராம தெய்வங்களின் கோயிலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். மாணவர்களே நிதி வழங்கி ஏற்பாடு செய்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.