நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மாணிக்கம்பட்டி ஊராட்சி பொம்மிநாயக்கன்பட்டியில் முத்தாலம்மன் அய்யனார், கன்னிமார் பொம்மையன், குள்ளழன் கோயிலில் கிராம தொழிலாளர்கள் சார்பில் ஆண்டுதோறும் உலக நன்மை, விவசாயம் செழிக்க, மழை வேண்டி அன்னதானம் வழங்கப்படுகிறது.
நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடந்தன. அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். பின் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு வள்ளி திருமணம் நாடகம் நடந்தது.