ADDED : ஜூலை 11, 2026 09:30 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை பாத்திமா கல்லுாரியில் முன்னாள் மாணவியர் சங்கம் சார்பில், சந்திப்புக் கூட்டம் நடந்தது. பேராசிரியர் ராகம் வரவேற்றார். முன்னாள் மாணவிகளான மும்பை பாபா அணு ஆராய்ச்சி மைய ஓய்வு பெற்ற இயற்பியல் குழு இயக்குநர் சகுந்தலா, ஓய்வுபெற்ற மாவட்ட முதன்மை நீதிபதி மீனா சதீஷ், பையர் பீ டெக்னோ சர்வீசஸ் நிறுவனர் பிரியா ஆகியோர் கல்லுாரி கால நினைவுகளை பகிர்ந்தனர்.
இக்கூட்டத்தில் அதிக எண்ணிக்கையில் மாணவிகள் பங்கேற்ற தமிழ் துறைக்கு கேடயம் வழங்கப்பட்டது. பேராசிரியர் ஆர்த்தி நன்றி கூறினார். பேராசிரியர்கள் ரேவதி, இவாஞ்சலின் ஸ்வீட்டி தொகுத்து வழங்கினர். கல்லுாரி செயலாளர் இக்னேஷியஸ் மேரி, துணை முதல்வர்கள் அருள்மேரி, பிந்து ஆண்டனி, வித்யா, நிகிலா உட்பட பேராசிரியர்கள், முன்னாள் மாணவிகள் பங்கேற்றனர்.
