/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விமானத்தில் துாய தமிழில் ஒலித்த அறிவிப்பு
/
விமானத்தில் துாய தமிழில் ஒலித்த அறிவிப்பு
ADDED : ஆக 20, 2024 04:45 AM
மதுரை: மதுரையில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் தமிழில் ஒலித்த விமானி பிரியன் விக்னேஷின் அழகிய அறிவிப்பு, பயணியரை வெகுவாக கவர்ந்தது.
விமானம் புறப்படுவதற்கு முன், விமானி பிரியன் விக்னேஷ், பயணியருக்கு அறிவித்ததாவது:
தாழ்நிலை மேகக் கூட்டங்களால் புறப்பாட்டிற்கு பின், சிறு அதிர்வுகளை எதிர்கொள்ள நேரிடும். பாதுகாப்பு காரணங்களுக்காக தங்கள் இருக்கை பட்டையை அணியுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
விமானம் புறப்பாட்டிற்கு பின், இடதுபுறமாக அமர்ந்திருக்கக்கூடிய பயணியர் வெளியே பார்த்தால், வைகை கரையின் மதுரை மாநகரின் நகருக்கு நடுவே பிரதானமாக அமைந்துள்ள, உலகப்புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் காட்சியை மிகத்தெளிவாக கண்டு ரசிக்கலாம்.
எங்களுடனான தங்கள் பயணம் இனிதாக அமைந்திட விமான நிறுவனத்தின் சார்பாக வாழ்த்துகள். மிக்க நன்றி.
இவ்வாறு அறிவித்தார்.
இதைக்கேட்ட பயணி ஒருவர், இன்ஸ்டாகிராமில், 'அருமை, நல்ல தமிழில் பேசி மகிழ்வித்ததற்கு அன்பும், நன்றியும், வாழ்த்து களும்' என பதிவு செய்துள்ளார்.

